புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களில் கடல் அலைகள் 2 முதல் 2.5  மீற்றர் வரை உயரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடல் அலைகள் உயரும் நிலை காணப்படுவதால் குறித்த கடற் பிரதேசங்களில் வசிப்போர்கள், மீன்வளத்துறையினர்  மற்றும்  கடற்படையினரை  அவதானமாக இருக்கும்படி வானிலை திணைக்களம் கேட்டுக் கெண்டுள்ளது.

இந் நிலை இம்மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.