வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்று இரவு  பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் குறித்த நபருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வியாபர நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே அவரது வீட்டில் வைத்திருந்த 3கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றி யதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் 25வயதுடைய தம்பிராசா தனரூபன்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.