ஐ.எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர்  முதல்தடவையாக ஈராக்கில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.

ஈராக்கின் 329 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு 7000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஈராக் தன்னை மீளகட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.

இன்றைய தேர்தலில் சியா சுனி பிரிவுகளை சேர்ந்தவர்களே அதிகளவிற்கு போட்டியிடும் அதேவேளை குர்திஸ் கட்சிகளும் தங்கள் வேட்பாளார்களை நிறுத்தியுள்ளன.

ஐ.எஸ். அமைப்பை தோற்கடித்ததற்காவும் ஈராக்கின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதற்காகவும் தற்போதைய அரசாங்கத்தை மக்கள்  ஆதரிக்கும் அதேவேளை  பெருமளவு ஊழல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியின்மை நிலவுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்