மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ; இலங்கை குழாம் அறிவிப்பு

By Priyatharshan

12 May, 2018 | 07:29 AM
image

இலங்கை அணி மேற்கிந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வணியுடன் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்கிந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை டெஸ்ட் குழாமுக்கு  தினேஸ் சந்திமல் தலைமை தாங்குகிறார்.

இதேவேளை, மஹேல உடவத்த மற்றும் கசுன் ராஜித ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவால் பெயரிடப்பட்டுள்ள குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோருக்கு உடற்தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையிலுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் குழாமில் பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

தினேஸ் சந்திமால் (தலைவர்), மஹேல உடவத்த, குசல் மெண்டிஸ்,டிகுசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டீ சில்வா, ரொஷேன் சில்வா, அஞ்சலோ மெத்தியூஸ், நிரோசன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வென்டர்ச, லஹிரு கமகே, கசுன் ராஜித, சுரங்க லக்மால், லஹிரு குமார, அசித பெர்ணான்டோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18