டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த ஆண்டில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய  இரு புதிய அணிகள் அறிமுகமாவுள்ளன.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, வேஸ்ட் இந்தீஸ், நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், சிம்பாவே ஆகிய நாடுகளுக்கே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐ.சி.சி. அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு அனுமதி வழங்கியதுடன் இவ் இரு அணிகள் இவ் வருடம் டெஸ்ட் போட்டிகளில் முதன் முறையாக களமிறங்கவுள்ளன.

இந் நிலையில் இன்று அயர்லாந்தில் நடைபெறவுள்ள பாக்கிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி களமிறங்குறது. அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் இந்தியாவை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களத்தில் இறங்கவுள்ளது. .