இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு சுமார்  8.3 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டிலி குறித்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் அவர் மீது இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அவர் மீதான வழக்குவிசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தி எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.