உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்கவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.