மலையக ரயில் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது பயணிகளும் பாதிப்புக்குள்ளாகினர்.  

நள்ளிரவு முதல் ரயில்வே அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பு போராட்டத்தினால்  கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த இரவு நேர ரயிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலும் நாவலப்பிட்டி ரயில்வே சமிஞ்சையில் அதிகாரிகளின் பனிபகிஷ்கரிப்பால் தடைப்பட்டது.


இன்று 11.05.2018     அதிகாலை  ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் நாவலப்பிட்டியை வந்தடைந்த ரயில்கள் போக்குவரத்தை தொடரமுடியாமல் தடைப்பட்ட நிலையில் ரயிலில் வந்த பயணிகளினால் பதற்றம்  ஏற்பட்ட நிலையில் நாவலப்பிட்டி பொலிஸாரினால் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்ப்பட்டதுடன் ரயிலில் வந்த பயணிகள் பஸ் வண்டிகளில் தமது பயணத்தை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது