(நா.தினூஷா)

வடகிழக்கில் பொது மக்களுக்கு சொந்தமான சுமார் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  ‍பொது மக்களின் காணிகளை விடுவிக்கும்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக சுமார் 866,71 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் குறித்த தொகையினை இலங்கை இராணுவத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நிதி அமைச்சு  மற்றும் மீள்குடியேற்றம்,  புனர்வாழ்வு,  வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு ஆகியன   முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.