இரண்டு கோடி மதிப்புள்ள 20 தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நபர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் 46 வயதான கண்டியைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் நேற்று காலையில் 2.15மணிக்கு சிங்கப்பூரிலிருந்து விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய வேளை விமான நிலைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அணிதிருந்த ஆடையின் பையிலிருந்து 20 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.