மந்தகதியில் தொடருகிறது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ; அரசாங்கம் உடனடியாக விழித்துக்கொள்வது அவசியம்

Published By: Priyatharshan

10 May, 2018 | 02:03 PM
image

கடந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டில்  நில­விய கால­நிலை மாற்­றங்கள் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய அள­வி­லான பாத­க­மான  தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. குறிப்­பாக  நாட்டின்  ஒரு­ப­கு­தியில் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு ஏற்­பட்­ட­துடன் வேறு சில பகு­தி­களில் கடு­மை­யான வரட்சி நில­வி­யது. இதனால்  நாட்டில் விவ­சா­யத்­து­றை­யா­னது பாரிய பாத­க­மான நிலையை எதிர்­கொண்­டி­ருந்­த­துடன் உற்­பத்­தியில் வீழ்ச்சி ஏற்­பட்­டது. 2017ஆம் ஆண்டின் நாட்டின்  மொத்த தேசிய உற்­பத்­தியில் விவ­சா­யத்­து­றை­யா­னது வெறு­மனே 7.7 வீத­மான பங்­க­ளிப்­பையே செய்­தி­ருக்­கின்­றது. 

விவ­சா­யத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்ற நாடு என்ற வகையில்  இலங்­கையின் 2017ஆம் ஆண்­டுக்­கான பொரு­ளா­தார    குறி­காட்­டி­களில் விவ­சா­யத்­து­றையின் பங்­க­ளிப்பு குறை­வாக இருக்­கின்­றமை   ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல என்­பதைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

2017ஆம் ஆண்டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­வீ­த­மா­னது 3.1 என்ற மிகக்­ கு­றைந்­த­ள­வி­லான சத­வீ­தத்தை  வெளிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.  கடந்த  2009ஆம் ஆண்டில் யுத்தம் முடி­வ­டைந்­த­போது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது   3.5 வீத­மாக காணப்­பட்­டது.   

அதன்­பின்னர் 2010 ஆம் ஆண்டு 8 வீத­மா­கவும்  2011 ஆம் ஆண்டு 8.4 வீத­மா­கவும் 2012 ஆம் ஆண்டு 9.1 வீத­மா­கவும் பொரு­ளா­தார வளர்ச்சி அதி­க­ரித்துச் சென்­றது. அதன்­பின்னர்  பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது வீழ்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­தது.  குறிப்­பாக 2013ஆம் ஆண்டு 3.4 வீத­மா­கவும் 2014 ஆம் ஆண்டு 5 வீத­மா­கவும் 2015 ஆம் ஆண்டு 4.8 வீத­மா­கவும் 2016 ஆம் ஆண்டு 4.4 வீத­மா­கவும் பொரு­ளா­தார வளர்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது 2009ஆம்  ஆண்­டுக்­குப்­ பின்னர்  மிக வேக­மாக அதி­க­ரிப்பு வீதத்­தைக் ­காட்­டிய பொரு­ளா­தார வளர்ச்சி வீத­மா­னது 2013 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் சரி­வ­டைய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. 

இதற்கு பல்­வேறு கார­ணங்கள் தாக்கம் செலுத்­தி­யி­ருக்­கின்­றன. இதில் குறிப்­பாக பாத­க­மான கால­நிலை மாற்­றங்கள் முக்­கிய இடத்தைப் பிடித்­துள்­ளன. வெள்ளம், வரட்சி போன்­றவையே பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தின. அது­மட்­டு­மன்றி முத­லீ­டுகள் அதி­க­ரிக்­காமை, புதிய வேலை­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டாமை, கடன் நெருக்­கடி, ஏற்­று­மதி–இறக்­கு­ம­திக்­கி­டை­யி­லான மீதி அதி­க­ரித்து செல்­கின்­றமை, ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி, போன்ற கார­ணங்கள் பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் குறை­வ­டைந்­த­மைக்கு முக்­கிய கார­ண­ங்களாக இருக்­கின்­றன. 

கடந்த 2017ஆம் ஆண்டு   பாத­க­மான  கால­நி­லை­யால் பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­ட­போ­திலும் "ஜி.எஸ்.பி.  பிளஸ்" வரிச்­ச­லுகை   மீண்டும் இலங்­கைக்கு  கிடைத்­த­மை­யா­னது  பொரு­ள­ாதா­ரத்­திற்கு கிடைத்த மிகப்­பெ­ரிய சாத­க­மான விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 

எனினும்  அத­னையும் தாண்டி பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது  3.1 வீத­மாக குறை­வ­டைந்­துள்­ளமை    நாட்டின் எதிர்­கால பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தொடர்பில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. 

தனி­நபர் வரு­மா­ன­மா­னது கடந்த வரு­டத்தில்  4,065 டொலர்­க­ளாக பதி­வா­கி­யி­ருக்­கி­றது.   இது 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை  அடைந்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது   11,360 கோடி ரூபா­வாக பதி­வா­கி­யி­ருக்­கி­றது.  

அதே­போன்று இறக்­கு­மதி செல­வா­னது 20,980 கோடி ரூபா­வாக அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் வர்த்­தக நிலுவை எந்­த­ளவு தூரம் அதி­க­ரித்திருக்­கின்­றது என்­பதை அறிந்­து­கொள்ள முடியும். அது­மட்­டு­மன்றி கடந்த வரு­டத்தில் ரூபாவின் பெறு­ம­தி­யா­னது 2 வீதத்தால் வீழ்ச்­சி­ய­டை­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­போன்று  தொழி­லின்மை 4.3 வீத­மாக கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இவ்­வாறு பார்க்­கும்­போது பொரு­ளா­தார  வளர்ச்­சி­யா­னது  தொடர்ந்து குறை­வ­டைந்து செல்­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­த­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதா­வது இந்த கட்­டத்தில் அர­சாங்கம் உட­ன­டி­யாக விழித்­துக்­கொள்­ள­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. 

பொரு­ளா­தார வளர்ச்சி வீத­மா­னது 4 அல்­லது 5 வீத­மாக இருப்பின் அதன் அர்த்தம் நாட்டின் பொரு­ளா­தாரம் மந்­த­க­தியில் இருக்­கின்­றது என்­ப­தாகும். அதா­வது உணவு, வீடு, ஆடை, என்­பன அனை­வ­ருக்கும் கிடைக்கும். ஆனால் அத­னைத் ­தாண்­டிய அபி­வி­ருத்தி எதுவுமிருக்­காது. அடிப்­படை விட­யங்கள்  கிடைத்­தாலும் வளர்ச்சி இல்­லாத தன்­மை­யையே   4 அல்­லது  5 வீத­மான பொரு­ளா­தார வளர்ச்சி  கோடிட்­டுக்­காட்­டு­கின்­றது. 

ஆனால்  6 அல்­லது 7 வீத பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­படின் அது  அடிப்­படைத் தேவை­களைத் தாண்டி அபி­வி­ருத்­தியை வெளிக்­காட்­டு­வ­தாக அமை­கி­றது.

ஆனால் எமது நாடு தற்­போது 3.1 வீத பொரு­ளா­தார வளர்ச்­சியையே பெற்­றுள்­ளது. இதன்­மூலம் நாம்  அடிப்­படை பொரு­ளா­தார விட­யங்­க­ளுக்கும் கீழேயே இருக்­கின்றோம் என்­பது கோடிட்­டுக் ­காட்­டப்­ப­டு­கின்­றது.  

இது தொடர்பில்  பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின்   பொரு­ளியல் சார்  சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் ஒருவர் எம்­மிடம்   கருத்­துப் ­ப­கிர்­கையில்,  "வேலை­வாய்ப்­புக்கள் அதி­க­ரித்தல், முத­லீ­டுகள் அதி­க­ரித்தல், உற்­பத்தி அதி­க­ரித்தல்,ஏற்­று­மதி உயர்­வ­டைதல் போன்­ற­வற்றினூடா­கவே பொரு­ளா­தார வளர்ச்­சி­வீதம் அதி­க­ரிக்கும். ஜப்பான், தாய்­லாந்து, மலே­ஷியா போன்ற நாடுகள்  6,7,8 போன்ற வீதத்­தி­லான பொரு­ளா­தார வளர்ச்­சியைப் பெற்றே இன்று முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளன. எமது கைத்­தொ­ழில்­துறை, சேவைத்­துறை, ஏற்­று­ம­தித்­துறை மற்றும் விவ­சா­யத்­துறை   ஆகி­ய­வற்றை முன்­னேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். 

பொரு­ளா­தார வளர்ச்சி என்­பது சமூக– பொரு­ளா­தார–அர­சியல் ரீதி­யான   ஸ்திரத்­தன்­மை­யையும் வளர்ச்­சி­யையும் எடுத்­துக்­காட்­டு­கி­றது. 2011ஆம் ஆண்டில் எமது நாடு  கூடிய பொரு­ளா­தார  வளர்ச்­சியை பதிவு செய்­தது.  அப்­போது  வெளி­நாட்டு முத­லீ­டுகள் அதி­க­ரித்­தமை, சுற்­று­லாத்­துறை வளர்ச்­சி­ய­டைந்­தமை மற்றும் அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டமை போன்ற கார­ணங்­க­ளால் இந்த  வளர்ச்சி பதி­வு­செய்­யப்­பட்­டது. ஆனால் தற்­போது 3.1 வீத­மாக   பொரு­ளா­தார வளர்ச்சி குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது. 

இது எந்­த­வ­கை­யிலும் திருப்­தி­ய­டை­யக்­கூ­டிய  வளர்ச்சி வீத­மாக இல்லை.  இதன் ஊடாக   அர­சாங்கம்  விழித்­துக்­கொண்டு   பொரு­ளா­தார வளர்ச்­சியை அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.   குறிப்­பாக  அதி­க­ளவு வெளி­நாட்டு முத­லீ­டு­களை  கவ­ர்வ­துடன் ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் புதிய வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­க­வேண்டும். பல்­தே­சி­யக் ­கம்­ப­னி­க­ளுடன் உடன்­ப­டிக்­கை­களை செய்து அந் நிறு­வ­னங்­களின் கிளை­களை இலங்­கையில் நிறு­வ­வேண்டும்", என்று குறிப்­பிட்டார். 

அந்த வகையில்  பொரு­ளா­தார வளர்ச்­சி­வீதம் கடந்த சில வரு­டங்­க­ளா­கவே குறை­வ­டைந்து செல்­கின்ற நிலையில் அது­தொ­டர்பில்  கொள்கை வகுப்­பா­ளர்­களும்    தீர்­மானம் எடுப்­ப­வர்­களும்  கவனம் செலுத்த வேண்டும்.   

இதே­வேளை  பொரு­ளா­தார  வளர்ச்­சியை நிலை­பே­றா­ன­தாக வைத்­தி­ருப்­ப­தற்கும் தொழில்­களை உரு­வாக்­கு­வ­தற்கும் வறு­மையைக் குறைப்­ப­தற்கும் இலங்கை மேலும் அதி­க­மான தனியார் முத­லீ­டு­களை நோக்­கியும் வர்த்­தகம் பண்­ணக்­கூ­டி­ய­தான துறை­வழி வளர்ச்சி மாதி­ரியை நோக்­கியும் நகர்வது அவசியமானது என உலக வங்கி கடந்த வருட  நடுப்பகுதியில்   சுட்டிக்காட்டியிருந்தது. 

அத்துடன் உலக வங்கியானது சவால்கள் காணப்பட்டபோதிலும் 2017 இல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயல்திறனைக் காண்பிப்பதாகவும் 2017ஆம் ஆண்டில்  பொருளாதார வளர்ச்சியானது 4.6 சதவீதத்தை அடைந்து நடுத்தர காலத்திற்குள்ளாக 5 சதவீதத்தை எட்டும் என்றும்  எதிர்வு கூறியிருந்தது.  ஆனால்     இம்முறை  உலக வங்கி எதிர்வு கூறியதையும் விட    குறைவாகவே    பொருளாதார வளர்ச்சி வீதம்   பதிவாகியுள்ளது என்பது    சுட்டிக்காட்டத்தக்கது. 

இந்த வகையில்  அரசாங்கம் உடனடியாக விழித்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். அதாவது தற்போது மந்தகதியிலான  பொருளாதார வளர்ச்சியை தாண்டி தற்போது   வீழ்ச்சிப்பாதையில்   குறிகாட்டிகள் காணப்படுகின்றன.  இது தொடர்பில் ஆராய்ந்து சரியான   வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கவேண்டியது  அரசாங்கத்தின் கடமையாகும்.   அரசாங்கம்  உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றது என்பதே உண்மையாகும். 

-ரொபட் அன்­டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45