ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாளயத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வித்தியாளயத்தில் கல்வி கற்கும் தரம் 04 மற்றும் தரம் 05ஜ சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் மாணவர்களுக்கு வழங்கபட்ட பாற்சோற்றை மாணவர்கள் உட்கொண்ட பின்னரே தலைசுத்து மற்றும் வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லையென பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவ நிருபர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM