இத்தாலியில் இடம்பெறவுள்ள ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து அமெரிக்காவின் முதல்தர  டென்னிஸ் விராங்கணை செரீனா வில்லியம்ஸ் இடைவிலகியுள்ளார்.

இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டி இத்தாலியின் ரோம் நகரில்  எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி் வரை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் 23 முறை கிரெண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவரான  அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்த தகவல் போட்டி அமைப்புக் குழுவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

36 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இடம்பெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோகி ஒசாகாவிடம் தோல்வியுற்றதையடுத்து அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. 

ஸ்பெயினில் இடம்பெற்றுவரும் மாட்ரிட் ஓப்பன் போட்டியில் இருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், இத்தாலி ஓபன் போட்டியில் இருந்தும் விலகி இருப்பதால் அவர் எதிர்வரும் 27 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ள  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவாரா? என்பது  தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தைப் பேற்றையடுத்து கடந்த 14 மாதங்களின் பின் இவ்வாண்டு போட்டிக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.