வவுனியா புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை கேரள கஞ்சாவுடன்  நபரொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ்ஸில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் குறித்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ 72 கிராம் கேரள கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த  35 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.