ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இன்று காலை அஸாம் அமீனை தொடர்பு கொண்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பை மீளப்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அஸாம் அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் ,

இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்வற்கு குற்றப்புலனாய்வு பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்மையானது பொருத்தமானதல்ல என தொலைப்பேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பொலிஸாரை தொடர்பு கொண்டு தெரிவித்ததையடுத்து விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்பு மீளப்பெறப்பட்டதாகவும், அசௌகரியங்களுக்கு வருத்தமும் தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும்  தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் டுவிட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகளுக்கு ,

பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!!!