சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு நவீன சிகிச்சை!!!

Published By: Digital Desk 7

10 May, 2018 | 12:14 PM
image

சர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் குணமடைவதில்லை. இதனால் அவர்கள் படும் துன்பம் அளவற்றது. 

இந்நிலையில் சென்னையிலுள்ள ஐ ஐ டி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சர்க்கரை நோயாளிகள் மகிழ்ச்சியடையக்கூடிய விடயத்தை தெரிவித்திருக்கிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் காயங்களை விரைவில் குணமடைவதற்கு மிககுறைந்த அளவு கீராபீன் ஓக்ஸைடு ஏற்றப்பட்ட நானோ கம்போஸ்ட் டிரஸ்ஸிங் சிகிச்சை முறை என்ற புதிய சிகிச்சை முறையை கண்டறிந்திருக்கிறோம்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கைகளிலோ அல்லது கால்களிலோ சிறிய அளவில் காயம் ஏற்பட்டால் கூட அது ஆறுவதற்கு குறைந்த பட்சம் 26 நாட்கள் ஆகும். ஆனால் இந்த புதிய நானோ கம்போஸ்ட் டிரஸ்ஸிங் சிகிச்சை முறையை பின்பற்றினால் இருபது நாளில் முழுமையான அளவில் அந்த காயங்கள் குணமடைந்துவிடுகின்றன. இதனை நிரூபித்திருக்கிறார்கள். அதே போல் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத சாதாரண மக்களுக்கும் காயங்கள் ஏற்பட்டால் தற்போதுள்ள சிகிச்சைகளின் படி அந்த காயங்கள் குணமடைவதற்கு 23 நாட்கள் ஆகும். ஆனால் அவர்களுக்கு இந்த நானோ கம்போஸ்ட் டிரஸ்ஸிங் சிகிச்சை முறையை பயன்படுத்தினால் பதினாறு நாளில் குணமடையலாம். 

இந்த ஆய்வினை சென்னையைச் சேர்ந்த  பேராசிரியர் முத்துவிஜயன் மற்றும் அவரது ஆய்வு மாணவர் பொன்ராசு ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29