வெலிகம - மிரிஸ்ஸ, தெஹிவளை – கல்கிஸ்ஸை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பிரதேசங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை இந்த மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 குறித்த பகுதிகளில் சுற்றுலாத்துறையினர் அதிகளவில் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.

 இதனைக் கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

பொலிஸார் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகளை முன்னெடுப்பதாக அதன் பணிப்பாளர் பீ.கே.பிரபாத் சந்தரசிறி தெரிவித்தார்.