சீனத் திட்டங்கள் தொடர்பில் கெட்ட நோக்கங்களுக்காக வதந்திகள்  - சீன தூதுவருடனான சந்திப்பில்  சபாநாயகர் 

Published By: Priyatharshan

10 May, 2018 | 01:29 AM
image

கெட்ட நோக்கங்களுக்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும்  சீன திட்டங்கள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார்.

தீவிரவாதிகள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். இலங்கையில் சீன நிதி வசதியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைக்கான சீன தூதுவர் செங் சூயுவானை சந்தித்த போது தெரிவித்தார். 

இருவரும் பொருளாதார உலகமயமாதல் மற்றும் சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.  சீனா மற்றும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பொருளாதார உலகமயமாதல் பயன் விளைவிக்கும் என சீனத் தூதுவர் தெரிவித்தார்.

இணைந்த கருத்துப் பரிமாற்றம் பங்கீடு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என சீன தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையுடனான உறவை சீனா முக்கியமாகக் கருதுகிறது. இரு நாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டதற்கிணங்க ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டத்தின் மூலம் முதலீடுகளை சீனா மேற்கொள்ளும். கொழும்பு துறைமுகத்திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பூங்கா கொழும்புடன், ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டியை இணைத்தல் திட்டம் என்பன மிக வேகமாக வளர்ந்து வருவதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் ராணுவ தொடர்பு எனும் கருத்தை அவர் மறுத்துரைத்தார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கும் சில அந்நிய தீயசக்திகள் செயற்படுகின்றன. என சீனத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை சபாநாயகர் கருஜெயசூரிய இதன்போது சீனாவிற்கு இலங்கை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமூகத்தின் அனைத்து தரப்பும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு வர்த்தக திட்டம் என்பதை அறியும். 

இலகையில் சீனா மேற்கொள்ளும் மெகா திட்டங்களுக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. இலங்கை பாராளுமன்றம் அதன் சக்திக்குட்பட்ட வகையில் இத்திட்டங்களுக்கு உதவும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44