நாளை மற்றும் நாளை மறுதினங்களில் டெங்கு தொற்று பரவ கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேல், சபரகமுவ மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் டெங்கு பரவல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் மற்றும் 700 சுகாதார அணிகள் இதனை முன்னெடுத்துள்ளன.

அரச நிறுவனங்கள், பாடசாலை, பொது இடங்கள் இவ்வாறு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

  டெங்கு தொற்றினால் 17 ஆயிரத்து 500 பேர்  இவ் வருட இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.