கோமாளி கிங்ஸ் நகைச்சுவை திரைப்படம் - Cineulagam

இந்த ஆண்டின் நடுப்­ப­கு­தியில் வெளிவர இருக்கும் இலங்கைத் தமிழ் நகைச்­சுவை திகில் திரைப்­ப­ட­மான கோமாளி கிங்ஸ் இன் முன்­னோட்ட அறி­விப்பு நிகழ்வு கடந்த மாதம் திரைப்­படக் கூட்­டுத்­தா­ப­னத்தில் சிறப்­பாக நடை­பெற்­றது. இத்­தி­ரைப்­படம் இலங்கை தமிழ் சினி­மாவின் பொன்­னான நாட்­களை ஞாப­கப்­ப­டுத்­தவும் அதை மீண்டும் நிலை­நாட்­டவும் எடுக்­கப்­படும் ஒரு முயற்­சியே. அதற்கு ஏற்­ற­வாறு கோமாளி கிங்ஸ் எனும் பெயர் 1976ஆம் ஆண்டு இலங்­கையில் வெளிவந்த வெற்றி நகைச்­சுவைத் திரைப்­ப­ட­மான கோமா­ளிகள் திரைப்­ப­டத்தை ஞாப­கப்­ப­டுத்­து­வ­தா­க ­அ­மைந்­துள்­ளது. கோமா­ளிகள் திரைப்­படம் இலங்கை தமிழ் சினிமா வர­லாற்றில் இது­வரை மிகப்­பெ­ரிய வசூலை பெற்­றுத்­தந்த வெற்றி திரைப்­ப­ட­மாகும். விக்­கி­பீ­டியா தக­வலின் படி கோமா­ளிகள் திரைப்­படம் நாட்டின் பல பாகங்­களில் மக்­க­ளின்­அ­மோக ஆத­ர­வோடு 70 நாட்­க­ளுக்கு மேலாக திரை­யி­டப்­பட்­டது.

உல­கெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு குறிப்­பாக இலங்கை தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு எம்­மவர்­களால் தென்­னிந்­திய தமிழ் திரைப்­ப­டங்­க­ளுக்கு நிக­ரான நல்ல கதைக்­கரு உடைய, சிறந்த திற­மை­களை வெளிப் ப­டுத்­து­கின்ற, நேர்த்­தி­யான தயா­ரிப்பு தரம் உடைய இலங்­கைக்கே தனித்­து­வ­மான திரைப்­ப­டங்­களை உரு­வாக்க முடியும் என நிரூ­பிப்­பதே கோமாளி கிங்ஸ் ­தி­ரைப்­படக் குழு­வி­ன­ரு­டைய இலக்காகும்.

கோமாளி கிங்ஸ் திரைப்­படம் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம் மற்றும் மலை­யக பிர­தே­சங்­களில் பட­மாக்கப் பட உள்­ளது. அது­மட்­டு­மின்றி இப்­பி­ர­தே­சங்­களின் மொழி­ந­டை­க­ளே­ இத்­தி­ரைப்­ப­டத்தில் பாவிக்கப் பட உள்­ளது. இத்­தி­ரைப்­ப­டத்தின் கதைக்­கரு நகைச்­சுவை, அதி­ரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்­தனை அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யது. மேலும் கோமாளி கிங்ஸ் திரைப்­ப­டத்தை ஒரு கிங் இயக்­கு­கிறார் என்றால் நம்­பு­வீர்­களா? ஆம்.கோமாளி கிங்ஸ் திரைப்­ப­டத்தை எழுதி இயக்கும் கிங் ரட்ணம் ஒரு அனு­பவம் மிக்க விளம்­பர மற்றும் விவ­ரண திரைப்­பட இயக்­குநர். இவரின் பெயரை பற்­றிய சந்­தே­கத்தை தீர்ப்­ப­தனால், அமெ­ரிக்­காவின் கறுப்­பி­னத்தின் புரட்­சி­யாளர் மார்டின் லூதர் கிங் ஜூனி­யரின் ஞாப­க­மாக இவ­ருக்கு கிங் எனும் பெயரை பெற்றோர் வைத்­தனர். 1999 ஆம் ஆண்டு AH டிவி நிறு­வ­னத்தில் தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லா­ள­ராக தனது பய­ணத்தை ஆரம்­பித்த கிங், பின்பு நோர்வே மற்றும் இங்­கி­லாந்து நாடு­க­ளி­லுள்ள தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளில் ­த­யா­ரிப்­பா­ள­ரா­கவும் தொகுப்­பா­ள­ரா­கவும் பணி­பு­ரிந்தார். 2004 ஆம் ஆண்டு நாடு ­தி­ரும்­பி­யதை தொடர்ந்து கிங் பல விளம்­ப­ரங்­க­ளையும், தனி­நபர் மற்றும் நிறு­வ­னங்­களின் சுய­ச­ரி­தை­க­ளையும் விவ­ரண திரைப்­ப­டங்­க­ளையும் எழுதி இயக்­கி­யுள்ளார். கோமாளி கிங்ஸ் கிங் ரட்ணத்தின் முத­லா­வது முழு­நீள திரைப்­ப­ட­மாகும்.

கோமாளி கிங்ஸ் அணியில் இன்னும் பல முக்­கி­யஸ்­தர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். நடிப்பில் அண்­மையில் கலா­பூஷணம் விருது பெற்ற மூத்த கலைஞர் ராஜா கணேசன் உடன் சேர்ந்து 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடி­கைக்­கான விரு­து­களை பெற்ற தர்சன் தர்­மராஜ் மற்றும் நிரஞ்­சனி சண்­மு­க­ராஜா இத்­தி­ரைப்­ப­டத்தில் நடிப்­ப­தோடு அண்­மையில் வெளியான சிங்­களத் திரைப்­ப­ட­மான பிர­வே­கைய திரைப்­ப­டத்தில் வில்­ல­னாக நடித்து புகழ் பெற்ற நடிகர் கஜன் கணே­சனும் கோமாளி கிங்ஸ் திரைப்­ப­டத்தில் நடிக்­கின்றார். இயக்­குநர் கிங் ரட்­ணமும் சிங்­கள சினிமாத் துறையில் புகழ் பெற்ற ஒப்­பனைக் கலை­ஞரும் நடி­க­ரு­மான பிரி­யந்த ஸ்ரீகு­மா­ரவும் நடிகர் குழாமில் உள்­ளனர்.

தயா­ரிப்பு குழுவின் தலை­வ­ராக சிரேஷ்ட உதவி இயக்­கு­ந­ரான நிமல் பிரான்சிஸ் பணி­பு­ரி­கிறார். சிரேஷ்ட ஒளிப்­ப­தி­வாளர் மஹிந்­த­பா­லவின் சிஷ்­ய­னான மஹிந்த அபே­சிங்க ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி­பு­ரி­கிறார். இவர்­க­ளுடன் அனு­பவம் மிக்க படத்­தொ­குப்­பாளர் ஹர்ஷ திஸா­நா­யக்க திரைப்­ப­டத்தின் படத்­தொ­குப்பை மேற்­பார்­வை­யி­டுவர்.

கோமாளி கிங்ஸ் ­தி­ரைப்­படம் பல தயா­ரிப்­பா­ளர்­களை உள்­ள­டக்­கிய ஒரு குழு­வினால் “Picture This” தயா­ரிப்பு நிறு­வ­னத்தின் கீழ் தயா­ரிக்­க­ப­டு­கின்­றது. “Picture This” தயா­ரிப்­பு­நி­று­வனம் ஈஸ்­வரன் பிரதர்ஸ் குழு­நி­று­வ­னத்தின் ஒரு துணை நிறு­வனம் ஆகும். இத் தயா­ரிப்பு குழு­விற்கு ஈஸ்­வரன் பிரதர்ஸ் நிறு­வ­னத்தின் பிர­தித் ­த­லைவர் கணேஷ் தெய்­வ­நா­ய­கமும் சிலோன் தியேட்டர்ஸ் நிறு­வ­னத்தின் தற்­போ­தைய தலை­வரும் வழக்­க­றி­ஞ­ரு­மான சு.செல்­வஸ்­கந்­த­னும் தலைமை தாங்­கு­கின்­றனர்.

கோமா­ளிகள் திரைப்­ப­டத்தின் முன்னாள் நட்சத்திரமும் சிரேஷ்ட அறிவிப்பாளருமாகிய பி.எச்.அப்துல் ஹமீட் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தின் கௌரவ வழிநடத்துநராக ஒத்துழைப்பு தருகிறார்.