(யுவராஜ்)

ருவண்டா நாட்டில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு காரணமாக 18 பேர் பலியானதோடு பலர் காணாமல் போயுள்ளனர்.

ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பல இடங்களில் பாரிய மண் சரிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அந் நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இது வரையிலும் சுமார் 200 பேர் வரை பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ருவண்டா மட்டுமன்றி கென்யா, சோமாலியா மற்றும் உகண்டா போன்ற நாடுகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.