இரத்தினபுரி - கலவானை தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரத்தினபுரி - கலவானை பிரதான வீதியில் தேதுரு கந்தை பகுதியை மறைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றள்ளது.

குறித்த பாடசாலைக்கு போதிய ஆசிரியர்களை அனுப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.