அமெ­ரிக்க நியூயோர்க் பிராந்­திய சட்­டமா அதிபர் எரிக் ஸ்னெய்­டர்மான் இலங்­கையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பெண்­ணொ­ருவர் உட்­பட 4 பெண்கள் அவ­ருக்கு எதி­ராக தாக்­குதல் குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­தை­ய­டுத்து பதவி வில­கி­யுள்ளார்.

இலங்­கையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட எழுத்­தா­ளரும் நடி­கையும் செயற்­பாட்­டா­ள­ரு­மான தான்யா செல்­வ­ரட்ணம், அமெ­ரிக்க திரைப்­படத் தயா­ரிப்­பா­ளரும் இயக்­கு­ந­ரு­மான மிசெல்லி மான்னிங் பாரிஷ் மற்றும் எரிக் ஸ்னெய்­டர்­மானின் முன்னாள் காதலி ஒருவர், முன்­னணி சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் ஆகி­யோரே மேற்­படி குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ள 4 பெண்­க­ளு­மாவர்.

அவர்­களில் இருவர் எரிக்கின் முன்னாள் காத­லிகள் என நியூ­யோர்க்கர் சஞ்­சிகை தெரி­விக்­கி­றது.

தான்யா மேற்­படி குற்­றச்­சாட்டு தொடர் பில் தெரி­விக்­கையில்,

எரிக் தன்னைப் பின் ­தொ­ட­ர்ந்து தனது தொலை­பேசி அழைப்­பு­களை ஒட்டுக் கேட்கப் போவ­தாக எச்­ச­ரி­த்­தி­ருந்­த­தா­கவும் தான் அவ­ரு­ட­னான உறவை முறித்துக் கொள்ளும் பட்­சத்தில் தன்னைக் கொல்லப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­த­தா­கவும் கூறினார்.

எரிக் தன்னை "பழுப்பு நிற அடிமை" என அழைத்­த­தா­கவும் சில சம­யங்­களில் அவர் தன்னை "எஜமானர்" என அழைக்க தனக்கு வற்­பு­றுத்­தி­ய­தா­கவும் தான் அவ்­வாறு அழைக்கும் வரை அவர் தன்னை அடித்­த­தா­கவும் தான்யா தெரி­வித்தார்.

அதே­ச­மயம் மிசெலி மான்னிங் பாரிஷ் கூறு­கையில்,

தான் எரிக்­குடன் சம்­பந்­தப்­ பட்­டி­ருந்த நான்கு வாரங்­க­ளுக்குப் பின்னர் தாம் இரு­வரும் முழு­மை­யாக ஆடை அணிந்த நிலையில் படுக்­கைக்குத் தயா­ரான போது திடீ­ரென எரிக் தனது முகத்தில் முழுப் பலத்தைப் பிர­யோ­கித்­து­ அ­டித்­த­தா­கவும் பின்னர் அவர் தன்னைக் கீழே தள்ளி மூச்சுத் திண­றச்­ செய்­த­தா­கவும் தெரி­வித்தார்.

"இது பாலியல் ரீதி­யான விளை­யாட்­டொன்று தவ­றாக இடம்­பெற்ற ஒன்­றல்ல. இந்தத் தாக்­குதல் எனது ஒப்­பு­த­லின்றி இடம்­பெற்­றது.உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை இவ்­வாறு அடிப்­பது பெரும் குற்றம்" என்று அவர் மேலும் கூறினார்.

எரிக்­கிற்கு எதி­ராக குற்­றச்­சாட்டை முன்­வைத்த அவ­ரது முன்னாள் காதலி தெரி­விக்­கையில்,

எரிக் தன் மீது உட­லியல் ரீதி­யான வன்­மு­றை­களை திரும்பத் திரும்ப மேற்­கொண்­ட­தாகக் கூறினார்.

அதே­ச­மயம் நான்­கா­வது பெண்­ணான முன்­னணி சட்­டத்­த­ரணி கூறு­கையில்,

எரிக்கின் பாலியல் ரீதி­யான அணு­கு­மு­றை­க­ளுக்கு தான் மறுப்பைத் தெரி­வித்­த­தை­ய­டுத்து அவர் தன்னை பலத்தைப் பிர­யோ­கித்து அடித்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இந்­நி­லையில் எரிக் ஸ்னெய்­டர்மான் தனக்கு எதி­ரான மேற்­படி குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யாகப் போரா­டப்­போ­வ­தாக ­பட்­டுள்ள அறிக்­கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனிப்­பட்ட ரீதி­யான ஒப்­பு­த­லுடன் கூடிய பாலியல் நட­வ­டிக்­கையில் மட்­டுமே தான் ஈடு­பட்­டி­ருந்­த­தாகத் தெரி­வித்த அவர் "நான் யாரையும் பாலியல் ரீதியில் தாக்­க­வில்லை. அத்­துடன் நான் பரஸ்­பர ஒப்­பு­த­லற்ற பாலியல் நடத்­தையில் ஒரு­போதும் ஈடு­பட்­ட­தில்லை"எனக் கூறி னார்.

"அந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளா­னது எனது தொழில் ரீதி­யான நடத்தை மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வை­யாக இல்­லாத நிலையில் அவர்கள் நெருக்­க­டி­யான தரு­ண­மொன்றில் நான் எனது அலு­வ­லக பணியை வழி­ந­டத்­து­வதை திறம்­பட தடுத்­துள்­ளனர்" என அவர் தனது அறிக்­கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு சட்­டமா அதி­ப­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்த எரிக், இந்த வருடம் மீளவும் மேற்­படி பதவி நிலைக்கு மீளப் போட்­டி­யிடத் திட்­ட­மிட்­டி­ருந்தார். எரிக்­கிற்கு எதி­ராக பாலியல் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து அவரைப் பதவி வில­கு­வ­தற்கு நியூயோர்க் ஆளுநர் அன்ட்றூ குவோமா அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

 "நியூ­யோர்க்கின் உயர்­மட்ட சட்ட அதி­காரி உட்­பட எவரும் சட்­டத்­திற்கு மேலா­ன­வர்கள் அல்லர். அதனால் எரிக் ஸ்னெய்­டர்மான் சட்­டமா அதி­ப­ராக சேவையைத் தொட­ரு­வது சாத்­தியம் என நான் நம்­ப­வில்லை" என அவர் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணையை மேற்­கொள்ள ஒரு விசாரணையாளரை தான் கோரவுள்ளதாக அன்ட்றூ குவோமா கூறினார்.

இந்நிலையில் எரிக் ஸ்னெய்டர்மான் முன்னாள் மனைவியான ஜெனிபர் கன்னிங் ஹாம் கடந்த  திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"எனக்கு எரிக்கை ஒரு கணவராக, தந்தையாக, நண்பராக சுமார் 35 வருட காலமாகத் தெரி யும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை என்னால் நம்ப முடியாதுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.