தங்க நகைகள் எனக் கூறி போலி நகை­களை அடகு நிலை­யங்­களில் அடகு வைத்து பணம் சம்­பா­தித்து வந்த 'ரஜா குழு' என அறி­யப்­படும் ஐந்து பேர் கொண்ட குழு­வொன்­றினை வெள்­ள­வத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

வெள்­ள­வத்தை பகு­தியில் அடகு நிலை­யங்­களில் போலி தங்க நகை­களை அடகு வைத்து பணம் பெற்­று­வ­ரு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த பல முறைப்­பா­டு­களை மையப்­ப­டுத்தி இடம்­பெற்று வந்த விசா­ர­ணை­களின் போது,  ஓர்  அடகு நிலை­யத்­துக்கு சந்­தேக நபர்­களில் இருவர் வந்த போது, அடகு நிலைய உரி­மை­யாளர் கொடுத்த தக­வலின் பிர­காரம் சந்­தேக நபர்­களைக் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

அவ்­வி­ரு­வ­ரி­டமும் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய  இக்­கு­ழுவை வழி நடாத்­திய 32 வய­தான ரஜா என அறி­யப்­படும்  நாக­வில்லு, பாலாவி - புத்­தளம் எனும் முக­வ­ரியைச் சேர்ந்த ஒரு­வரை கைது செய்­த­தா­கவும் அவ­ருக்கு போலி நகை­களை செய்­து­கொ­டுக்கும்  கல்­முனை  சேர்ந்­த­வரும் தற்­போது கொழும்பில் வசித்து வரு­வ­ப­ரு­மான நகை வடி­வ­மைப்­பா­ள­ரான  மற்­றொ­ரு­வ­ரையும் கைது செய்­துள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இந் நிலையில் சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் இவ்­வாறு அடகு வைக்­கப்­பட்ட போலி நகைகள் தொடர்­பி­லான 52 பற்றுச் சீட்­டுக்­களை மீட்­டுள்­ள­தா­கவும், 46 வளை­யல்கள், இரு மோதி­ரங்கள் மற்றும் 4 சங்­கி­லிகள் இவ்­வாறு அடகு வைக்­கப்­பட்ட ஆப­ர­ணங்­களில் அடங்­கு­வ­தா­கவும் இத­னூ­டாக 46 இலட்­சத்து 94 ஆயி­ரத்து 649 ரூபா பணத்தை சந்­தேக நபர்கள் சம்­பா­தித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

 இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

"தங்க நகை எனக் கூறி வெள்­ள­வத்தை பகு­தியில் உள்ள சில அடகு நிலை­யங்­களில் போலி தங்க நகைகள் அடகு வைக்­கப்­பட்டு பணம் பெறப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டுகள் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றி­ருந்­தன. அது தொடர்பில் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கபில ஜய­மான்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய குற்­ற­வியல் குழு விசா­ர­ணை­க­ளை நடாத்­தி­யது.

இந் நிலையில்  கடந்த 5ஆம் திகதி  வெள்­ள­வத்­தையில் உள்ள அடகு நிலையம் ஒன்­றுக்கு மோதி­ரங்கள் இரண்டை அடகு வைக்க தம்­ப­தி­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தும் ஆண், பெண் இருவர் வந்­துள்­ளனர்.  அவர்­களின் நகையில் சந்­தேகம் கொண்ட அடகுக் கடை உரி­மை­யாளர் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கவே அங்கு சென்ற பொலிஸார் அவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்­தனர்.

 37 வய­தான புத்­தளம் பகு­தியைச் சேர்ந்த ஆண் ஒரு­வரும் மற்றும் பொர­ளையைச் சேர்ந்த 42 வய­தான  பெண் ஒரு­வ­ருமே பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில்  இந்த நட­வ­டிக்­கையின் பிர­தான சந்­தேக நப­ரான ரஜா என்­ப­வ­ரையும் மேலும் இரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். புத்­த­ளத்தை சேர்ந்த 54 வய­து­டைய இரு­வரும் கல்­மு­னையைச் சேர்ந்த 28 வய­தான தற்­போது கொழும்பில்  நகை தயார் செய்யும் தொழிலில் ஈடு­பட்­டுள்ள மற்­றொ­ரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்த குழுவை ரஜாவே வழி நடத்­தி­யுள்ள நிலையில் நகை தயா­ரிக்கும் தொழில் ஈடு­பட்டு வந்த நபர் அடகு வைப்­ப­தற்­கான போலி நகை­களை தயார் செய்து கொடுத்­துள்ளார். வெள்ளி, தங்கம் கலந்து அவர் இதனை தயார் செய்­துள்ளார்.  நீர்­கொ­ழும்பு,  சிலாபம், புத்­தளம், வெல்­லம்­பிட்டி, நுவ­ரெ­லியா, ஜா- எல, மரு­தானை, ஆன­ம­டுவ மற்றும் வெள்­ள­வத்தை உள்­ளிட்ட 17 பொலிஸ் பிரி­வு­களில் உள்ள அடகு நிலை­யங்­களில் இவ்­வா­றான ஜபோலி நகைகள் அடகு வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் சந்­தேக நபர்­களைக் கைது செய்யும் போது அடகு வைக்க தயார் நிலையில் இருந்த 6 மோதி­ரங்கள் 6 வலை­யல்கள் என்­ப­வற்றை பொலிஸார் கைப்­பற்­றினர். அத்­துடன் தங்கம், வெள்ளித் துண்­டுகள், 3 இலட்சத்து 54 ஆயிரத்து 620 ரூபா பணம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

பொலிஸாரின் விசாரணையில் இக்குழு  அடகு வைத்த 52 பற்றுச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  அடகு வைத்து இவர்களால் 46 இலட்சத்து 94 ஆயிரத்து 649 ரூபா பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை தொடர்கின்றன. சந்தேக நபர்கள் ஐவரும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறயலில் வைக்கப்பட்டுள்ளனர்.