அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும் வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னும் சிங்கப்பூரில் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வட கொரியத் தலைவர் யொங் தென்கொரிய தலைவர் மூன் ஜோ இன்னை சந்தத்ததுடன் கொரியாவை அணுவாயுதம் அற்ற நாடாக மாற்றுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

இச் சந்திப்பின் போது யொங் தாம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தென்கொரிய தூதரகக் குழுவிடம் தெரிவித்தார். 

இந் நிலையில் ட்ரம் மற்றும் யொங் நேரில் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்புக்கான திகதி, இடம் என்பன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்  எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி கனடாவில் நடைபெற்றவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதுடன் ஜூன் மாதம் 09 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள  மாநாட்டிலும் கலந்து கொண்டு வட கொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுடன்  நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக  தென்கொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.