(இரோஷா வேலு)
தகவல் அறியும் சட்டம் மூலமானது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதோடு அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் காணப்படுகின்றது என நோர்வே நாட்டின் தூதுவர் எச்.ஈ.தொர்ப்ஜேர்ன் கெளஸ்தாஸ்தர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால பூர்த்தியை முன்னிட்டு தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த வியாழக்கிழமை பத்திரிகை சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இன்றும் நாளையும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மாநாட்டை நடத்துவது என்பது சிறந்தவொரு நிகழ்வாகும்.
இம்மாநாட்டின் மூலம் பல நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கையில் 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிவதுடன் அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் இச் சட்டமூலம் காணப்படுகிறது.
மேலும் இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பு கூறல் உறுதிப்படுத்தப்படுவதுடன் நாட்டின் பல்வேறு மட்டங்களில் இடம்பெறும் ஊழல்களை வெளிப்படுத்தவும் இச் சட்டம் உதவ கூடும்.
இதுவரையில் 118 நாடுகள் இச் சட்டத்தை உள்வாங்கி தங்கள் பிரஜைகளும் இவ்வுரிமையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன . சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தகவலறியும் உரிமைச் சட்ட மூலத்தின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM