தெஹிவளை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரின் இரு குழந்தைகளை அவரது கணவரே கடத்திச் சென்றிருப்பதாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்ற அறிவுறுத்தல்படி குழந்தைகள் தாயாரின் பொறுப்பிலிருந்து வந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் உள்ள அவரது கணவரால் குழந்தைகள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்.