இணைய வன்முறைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான பிரச்சார நடவடிக்கையை அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் ஆரம்பித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் தனது பிரச்சார நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

இன்றைய மிகவேகமாக தொடர்புக்கொள்ளக்கூடிய  எப்போதும் தொடர்புபட்டுள்ள உலகில்,சிறுவர்களிற்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பழகுவதற்கு போதிய அவகாசமில்லாத நிலை காணப்படுகின்றது என வெள்ளை மாளிகை நிகழ்வில் உரையாற்றுகையில் மெலானியா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறுவர்கள் தற்கொலை,போதைப்பொருள் பாவனை இணைய வன்முறை போன்றவற்றிற்கு அடிமையாகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருதாய் என்ற அடிப்படையிலும் முதல் பெண்மணியாகவும் நான் இது குறித்து  கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் சிறுவர்கள் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் அதேவேளை அவர்களிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என  குறிப்பிட்டுள்ள அமெரிக்க முதல்பெண்மணி ஆனால் சமூக ஊடகஙகள் எதிர்மறையான விதத்திலேயே அதிகளவு பயன்படுத்தப்படுவதை காணமுடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.