பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் அண்மையில் இடம்பெற்ற தீ சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை மஹரகமவில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பான பல ஆவணங்கள் தீயில் எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ