பெயரளவில் தகவலறியும் உரிமைச்சட்டம்

Published By: Priyatharshan

08 May, 2018 | 11:07 AM
image

பொது நலன் என்­பதை குறிக்­கோ­ளாக கொண்டு 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி இலங்கைப் பாரா­ளு­மன்­ற­மா­னது, தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்­தினை நிறை­வேற்­றி­யதன் மூலம் பிர­ஜை­களின் அடிப்­படை உரி­மை­யான தக­வ­லறியும் உரி­மைக்கு வலுச்­சேர்த்­துள்­ளது. ஆயினும் இதனை உரிய வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் மற்றும் பொது மக்­களும் தோல்வி கண்­டுள்­ளனர். இதற்கு ஓர் சிறந்த உதா­ர­ண­மாக, தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தக­வ­ல­றியும் உரிமை மறுக்­கப்­ப­டு­வ­தினை சுட்­டிக்­காட்­டலாம். ஆம், தக­வ­ல­றியும் உரிமை என்­பது நாட்டின் அனைத்து பிர­ஜை­க­ளுக்கும் சம­மா­ன­தொன்­றா­கவே சட்டம் சொல்­கின்­றது. ஆனால் நடை­மு­றையோ வேறு. அந்­த­வ­கையில், தக­வ­ல­றியும் உரிமைச் சட்­ட­மா­னது தமி­ழ­ருக்கு வெறும் பெய­ர­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. காரணம் அரச கரும மொழி­யாக தமிழ் மொழியும் உள்­ளடக்­கப்­பட்­டி­ருந்­தாலும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கத் துறைசார் நிறு­வ­னங்­க­ளிலும் தமிழ் மொழி புறக்­க­ணிக்­கப்­படும் நிலையே காணப்­ப­டு­கின்­றது. இது தமிழ் பேசும் மக்­களை வெறும் வாக்கு வங்­கி­க­ளா­கவே அனைத்து தரப்­பி­னரும் கணிப்­பிட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. அதன்­படி, இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அர­சி­ய­ல­மைப்­பு­களை, அதனை இயற்றும் அர­சாங்­கங்கள் சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் தன் அந்­தஸ்தை நிலை­நாட்டிக் கொள்ள மேற்­கொள்ளும் ஓர் அர­சியல் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. தக­வ­ல­றியும் உரிமை என்­பது பொது மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­களுள் முக்­கி­ய­மா­ன­வொன்­றாகும். அவற்­றுடன் அதனை தங்கள் மொழி­க­ளி­லேயே பெற்­றுக்­கொள்ளக் கூடிய சந்­தர்ப்பம் சட்­டத்தில் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், இது வெறும் கண்­து­டைப்பாகவே இதுவரையுள்ளது. பொது நிறு­வ­னங்­க­ளுக்கு தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் ஓர் விண்­ணப்­பத்தை பதிவு செய்யும் வேளையில், அந்த நிறு­வ­னங்­களில் தமிழ் மொழியில் தகவல் வழங்க கூடிய ஓர் அதி­காரி காணப்­ப­டாமை தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தகவல் வழங்­கு­வதில் காணப்­படும் அச­மந்த போக்­குத்­தன்­மை­யையும் வெளிப்­ப­டுத்­து­கின்­றது.  அவற்­றுடன் இச்­சட்­டத்தின் கீழ் பொது அதி­கா­ர­ச­பைகள் என்­பது அனைத்து அர­சாங்க நிறு­வ­னங்­க­ளையும் உள்­ள­டக்­கு­வ­தோடு சில சந்­தர்ப்­பங்­களில் தனியார் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளையும் உள்­ள­டக்­கு­கின்­றது. ஆயினும், 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தி­லி­ருந்து இன்று வரையில் ஒரு வரு­டமும் 10 மாதங்­களும் கடந்­துள்ள நிலையில் இவ்­வா­றா­ன­வொரு சட்டம் இலங்­கையில் உள்­ளமை பொது மக்­க­ளுக்கும், மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும், அரச அதி­கா­ரி­க­ளுக்கும் தெரி­ய­வில்லை என்­பது கசப்­பான ஓர் உண்­மை­யாகும்.மேலும் கல்வி அமைச்சின் கீழ் வரும் அனைத்து கல்­விசார் நிறு­வ­னங்­க­ளிலும், நீதி அமைச்சு சார் அரச நிறு­வ­னங்­களில், பதி­வாளர் நாயகம் திணைக்­க­ளத்தில் என அரச நிறு­வ­னங்­களின் பட்­டியல் நீண்டு கொண்டே செல்லும் இவ்­வ­னைத்து நிறு­வ­னங்­க­ளிலும் தமிழ் பேசும் அல்­லது தமிழ் அறிவு கொண்ட தகவல் வழங்கும் அதி­காரி காணப்­ப­ட­வில்லை. குறிப்­பாக மலை­யக பகு­தி­களில் காணப்­படும் கல்வி வல­யங்­க­ளான கொத்­மலை, கட்­டு­கஸ்­தோட்டை, வெல்­ல­வாய போன்ற வலய கல்வி திணைக்­க­ளங்­களில் தமிழ் மொழி மூல அதி­கா­ரி­களும் இல்லை. அங்கு கட­மை­யாற்றும் சில அதி­கா­ரி­க­ளுக்கு எவ்­வாறு கோரிக்­கை­யா­ளரின் உரி­மையை பெற்றுக் கொடுப்­பது என்ற தெளிவும் இல்லை. ஓர் கல்வி துறைசார் நிறு­வ­னத்­திலே தமிழ் மொழி தேர்ச்சி பெற்ற அதி­கா­ரிகள் காணப்­ப­ட­வில்­லை­யாயின் ஏனைய அர­சசார் நிறு­வ­னங்­களின் நிலை­யென்ன?அதேபோல் குறித்த அரச நிறு­வ­னங்­களில் இணை­யத்­த­ளங்கள் தினமும் பதி­வி­டப்­ப­ட­வில்லை. அவற்றில் அதிக நிறு­வ­னங்­களில் தமிழ் மொழி மூல இணை­யத்­த­ளங்கள் காணப்­ப­ட­வில்லை. சில நிறு­வ­னங்­களில் அதி­கா­ரி­க­ளுக்கு தக­வ­ல­றியும் உரிமைச் சட்டம் என்­றாலே என்ன என்று தெரி­ய­வில்லை. தக­வ­லொன்றை பெற்­றுக்­கொள்ள அவ­சி­யப்­படின் மிக இல­கு­வான இணை­யத்­தளம் மூலம் விண்­ணப்­பத்தை பதி­வி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் மறுக்­கப்­ப­டு­கின்­றது. ஓர் விண்­ணப்பம் பதி­யப்­பட்டு தகவல் கிடைக்க குறைந்த பட்சம் 28 நாட்கள் செல்லும் நிலையில் தபால் மூலம் விண்­ணப்பம் உரிய இடத்தை சென்­ற­டைய மேலும் நான்கு நாட்கள் தேவைப்­ப­டு­வதும் கோரிக்­கை­யா­ளரை சலிப்­ப­டைய வைக்கும் செய­லாகும்.  இவ்­வா­றான பல குழப்­பங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே தக­வ­லொன்­றினை நாம் பெற்றுக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. இவற்றைத் தாண்டி இவ்­வு­ரி­மையை பிர­ஜைகள் முழு­மை­யாக அனு­ப­வித்­திட சில விட­யங்கள் குறித்து அறிந்­தி­ருத்தல் அவ­சி­ய­மாகும். அந்­த­வ­கையில், அறி­முகம்இச்­சட்­ட­மா­னது பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் வெகு­சன ஊட­கத்­துறை அமைச்சின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தை தங்கள் மொழி­க­ளி­லேயே பெற்றுக் கொள்­வது கோரிக்­கை­யா­ளரின் உரி­மை­யாகும். அத­னுடன் கோரிக்­கை­யாளர் தன் கோரிக்­கையை முன்­வைப்­ப­தற்கும் மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்கும் அலைந்து திரிய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இலத்­தி­ர­னியல் வடி­வத்­திலும் தபால், பக்ஸ், மற்றும் மின்­னஞ்சல் மூல­மா­கவும் கோரிக்­கையை முன்­வைக்­கலாம்.கோரிக்­கை­யாளர் தங்­களை தொடர்பு கொள்ள வேண்­டிய விப­ரங்கள் தவிர்ந்த ஏனைய பிரத்­தி­யேக விப­ரங்­களை வழங்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கோரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தற்­கான சகல விதி­வி­லக்­கு­களும் பொது­நலன் என்ற மேலோங்­கிய அடிப்­ப­டையில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டலாம் என்ற முக்­கிய விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. தக­வ­ல­றியும் ஆணைக்­கு­ழுவால் குறித்­து­ரைக்­கப்­படும் கட்­டண அட்­ட­வ­ணையில் குறிப்­பி­டப்­பட்­ட­தற்­க­மைய கோரிக்கை விடுப்­பவர் கட்­ட­ண­மொன்றைச் செலுத்தல் வேண்டும். கோரிக்­கை­யா­ளரால் விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தக­வலை பரி­சீ­லிப்­ப­தற்கும் அதனை டிஜிட்டல் முறையில் பெற்­றுக்­கொள்­ளவும் பொது மக்­க­ளுக்கு அனைத்து உரி­மையும் வழங்­கப்­பட்­டுள்­ளது. கோரிக்­கை­க­ளா­னது மக்­களை நேர­டி­யாக பாதிக்கும் விட­யங்­களில் அதி­க­மாக தாக்கம் செலுத்­தப்­ப­டலாம். எழுத்­த­றி­வில்லா குழு­வி­ன­ருக்கும் தக­வ­ல­றி­யலாம். அதற்­காக எழுத்­து­மூ­ல­மான கோரிக்­கையை முன்­வைக்க முடி­யாத சந்­தர்ப்­பத்தில் வாய்­மொழி மூல­மாக கோரிக்­கையை முன்­வைக்க அதனை தகவல் அலு­வலர் எழு­திக்­கொள்ள வேண்டும். அவ்­வாறே எம்­மு­றை­யி­லா­யினும் கோரிக்­கையை பெற்றுக் கொண்­ட­தற்­கான அறி­விப்­பொன்றை உட­ன­டி­யாக வழங்­குதல் வேண்டும். தகவல் அதி­காரிஒவ்­வொரு பொது அதி­காரி சபையும் ஒன்­றுக்கு மேற்­பட்ட தகவல் அதி­கா­ரி­களை கொண்­டி­ருப்பர். சில சந்­தர்­ப்பங்­களில் சக அலு­வ­லர்கள் தகவல் வழங்­கு­வ­தற்கு உதவ வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். அத­னுடன், தகவல் அலு­வலர் நிய­மிக்­கப்­படும் வரையில் அந்­நி­று­வ­னங்­களில் தலைவர் அல்­லது பிர­தான நிறை­வேற்று அதி­காரி தகவல் அதி­கா­ரியின் கட­மை­களை நிறை­வேற்ற கட­மைப்­பட்­டுள்ளார். இவர்கள் தொடர்­பான தக­வல்­களை இணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து நீங்கள் பெற்றுக் கொள்­ளலாம். பொது அதி­கார சபைகள் 10 வருட தக­வல்­க­ளையே பேண­வேண்­டிய கடப்­பாடு உடை­ய­வர்கள். ஆயினும் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் நீதி­மன்­றத்தில் குறித்த தகவல் தொடர்பில் வழக்கு தொட­ரப்­ப­டு­மாயின் அந்த தக­வல்­களை வழக்கின் தீர்ப்பு வரையில் அழி­வுக்­குட்­ப­டுத்த முடி­யாது. மேலும் பொது அதி­கார சபைகள் அனைத்து தக­வல்­க­ளையும் சரி­யான முறையில் இலத்­தி­ர­னியல் வடிவும் பேணி­வ­ருதல் அவ­சி­ய­மாகும். பொது மக்கள் அணுக கூடிய விதத்தில் பொது அதி­கார சபைகள் ஆண்­ட­றிக்­கையை ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பிக்க வேண்டும். இவை சரியா நிகழ்­கின்­ற­னவா என்­பதை மத்­திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் கவ­னத்தில் கொள்­ளு­தலும் அமைச்­சர்­களின் கட­மை­யாகும். கோரிக்­கை­யா­ளரின் உரிமம் கோரிக்­கை­யாளர் தக­வ­லினை பெற்றுக் கொள்ள 14 நாட்கள் காத்­தி­ருத்தல் வேண்டும். கோரிக்கை பெறப்­பட்­ட­தையும் தக­வல்கள் கிடைக்கும் கால எல்லை மற்றும் அதனை  நீடிப்­ப­தாயின் அது குறித்த விட­யங்கள் அனைத்­தையும் கோரிக்­கை­யா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­துதல் தகவல் அதி­கா­ரியின் கட­மை­யாகும். அந்­த­வ­கையில் ஒரு கோரிக்­கையின் மூலம் 14 தொடக்கம் 21 நாட்­க­ளுக்குள் தக­வலை பெற்­றுக்­கொள்ள இயலும். எனினும் கோரப்­பட்ட தக­வ­லா­னது ஒரு­வரின் உயிர் சம்­பந்­தப்­பட்ட விடயம் எனில் 48 மணி­நேரத்­திற்குள் அத் தக­வலை பெற்றுக் கொடுக்க தகவல் அதி­காரி கட­மைப்­பட்­டுள்ளார். கோரிக்­கை­யா­ள­ருக்கு தக­வலை பெற்றுக் கொள்­வ­தற்கு சகல உரி­மை­யுமுண்டு. ஆவ­ணங்­களை பரிசீ­லனை செய்தல், பிரதி எடுத்தல், புகைப்­படம் எடுத்தல், இறு­வட்டு, நெகிழ்­வட்டு, நாடாக்கள்,ஒளிப்­படத் தட்டு அல்­லது வேறு இலத்­தி­ர­னியல் வடிவத்­திலும் தக­வலை பெற்றுக் கொள்ள உரி­மை­யு­டை­ய­வர்­க­ளா­வீர்கள். அவ்­வாறே கோரிக்­கை­யாளர் கோரிக்கை மறுக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணத்தை அறிந்து கொள்­ளவும் உரித்­து­டை­ய­வர்­க­ளாவர். எல்லா உரி­மை­க­ளையும் போலவே இந்த உரி­மையும் முழு­மை­யா­ன­தல்ல வரை­ய­றுக்­கப்­பட்ட சில சந்­தர்ப்­பங்­களில் அவை மறுக்­கப்­ப­டலாம். எனினும் ஒரு நியா­ய­மான நோக்­கத்­திற்கு குந்­தகம் விளை­விக்­கு­மென்ற போதிலும் வெளி­யி­டு­கையில் பொது நலன் இருப்பின் அதனை வெளி­யி­ட­வேண்டும். தக­வல்கள் வழங்க மறுக்­கப்­படும் சந்­தர்ப்­பங்கள் தனிப்­பட்ட நபரின் அந்­த­ரங்க விட­யங்­களின் போது மறுக்­கப்­ப­டலாம். ஆயினும் பொது ஆர்­வத்தை தூண்­டக்­கூ­டி­ய­தாயின் அது வெளிப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். நாட்டின் பாது­காப்பு, நடை­மு­றையில் உள்ள சர்­வ­தேச ஒப்­பந்­தங்கள் குறித்து தகவல் மறுக்­கப்­படலாம். நாட்டின் பொரு­ளா­தாரம் தொடர்­பான வர்த்­தக ஒப்­பந்­தங்கள் குறித்த தக­வல்கள், புலமைச் சொத்­துக்கள், தனி நபர் மருத்­துவ தக­வல்கள், நீதி­மன்ற வழக்­குகள், அந்­த­ரங்கம் காக்க வேண்­டிய சட்­ட­சிக்கல் கொண்ட தேர்தல் மற்றும் அமைச்­ச­ரவை குறிப்­ப­றிக்கை தொடர்­பாக தகவல் மறுக்­கப்­ப­டலாம். 10 வரு­டங்கள் கடந்த தக­வ­லாயின் வழங்­கப்­ப­டலாம். ஆயினும் வர்த்­தக ஒப்­பந்­தங்கள் முடி­வுறும் வரையில் வெளி­யிட முடி­யாது. தகவல் வழங்க மறுக்­கப்­பட்­டமை தொடர்­பான மேன்­மு­றை­யீடு தக­வ­ல­றியும் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்டால், விதி­வி­லக்­கான கார­ணங்­களை காட்டி தகவல் அலு­வலர் தக­வலை வெளி­யிட மறுத்தால், நேர வரை­ய­றையை பின்­பற்­றாது விட்டால், பிழை­யான தக­வல்­களை வழங்­கினால், கூடிய கட்­டணம் அற­வி­டப்­பட்டால், கோரப்­பட்ட வடி­வத்தில் தகவல் வழங்க மறுத்தால், தகவல் உரு­மாற்றம் அல்­லது அழிக்­கப்­பட்டால் மேன்­மு­றை­யீடு செய்ய இயலும். மேன்­மு­றை­யீடு மேன்­மு­றை­யீட்டை மேற்­கொண்டால் மூன்று வேலை நாட்­க­ளுக்குள் பற்றுச் சீட்­டினை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவற்­றுடன் ஆணைக்­குழு மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்தை மூன்று வாரங்­க­ளுக்குள் வழங்க வேண்டும். கால­தா­மதம் ஏற்­படின் அதற்­கான கார­ணத்தை கோரிக்­கை­யா­ள­ருக்கு அறி­ய­த் தரல் வேண்டும். அவற்­றுடன் தக­வல­றியும் விண்­ணப்பம் விண்­ணப்­பிக்­கப்­பட்டு தகவல் கிடைத்து அல்­லது வேறு கார­ணங்­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் மேன்­மு­றை­யீடு குறைந்த பட்சம் இரண்டு மாதங்­க­ளுக்குள் மேற்­கொள்­ளப்­படல் வேண்டும். மேன்­மு­றை­யீடு மேற்­கொள்­வ­தற்கு தாமதம் ஏற்­படின், அத்­தா­ம­தத்­திற்­கான காரணம் உங்கள் கட்­டுப்­பாட்­டினை விஞ்­சி­ய­தாயின் அதனை ஆணைக்­குழு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணைக்­கு­ழுவும் அதன் தீர்­மா­னங்­களை எழுத்­து­மூ­லமே வழங்க வேண்டும். ஆணைக்­குழு தீர்­மா­னத்தில் ஏதேனும் முறைப்­பா­டுகள் இருப்பின் 14 நாட்­க­ளுக்குள் நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­யலாம். இதன்­போது மேன்­மு­றை­யீட்டில் சட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளுக்கு கட்­டுப்­பட்டு நிரூ­பிக்க வேண்­டி­யது பொது அதி­கார சபை­களின் கடப்­ப­ாடாகும். எழுத்து மூலம் நீங்கள் அறி­விக்கும் பட்­சத்தில் கோரிக்­கை­யாளர் சார்பில் வேறொ­ருவர் நீதி­மன்றில் வழக்கு தொட­ரலாம். சட்­டத்தை மீறும் போது வழங்­கப்­படும் தண்­டனைபிழை­யான தகவல் வழங்­கினால், விசா­ர­ணை­க­ளுக்­காக ஆணைக்­கு­ழுவில் முன்­னி­லை­யா­க­வில்­லை­யாயின், தக­வல்­களை அழித்தால், சிதை­வுக்­குட்­ப­டுத்தல், ஆணைக்­குழு தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற தவறின், ஆணைக்­குழு தீர்­மா­னத்தை மீறி தக­வல்­களை வழங்­கினால் ஐம்­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­ப­டாத தண்­டப்­ப­ணத்­திற்கு அல்­லது இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேற்­ப­டாத சிறைத்­தண்­டனை அல்­லது இரண்டு தண்­ட­னை­க­ளுக்கும் உள்ளாக்கப்படுவர். அவற்றுடன் தகவல் அதிகாரிக்கு உதவ மறுப்பின் உதவியாளரும் குற்றவாளி அவருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படும். இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். ஆணைக்குழுசுயாதீனமான ஆணைக்குழுவொன்றே இயங்கும். அதில் மூவர் காணப்படுவர். இருவர் அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டவர். மற்றவர் ஊடக துறை சார்ந்தவர். இவர்கள் பாராளு­மன்றத்­தால் ஒதுக்கப்படும் நிதியில் செயலாற்றுவர். அது தொடர்பான கணக்காய்வு­­­களும் மேற்கொள்ளப்படும். முடிவுரைஇதனால் விரைவில் இணை­யத்தின் மூலம் தகவல் அறியும் கோரிக்­கையை முன்­வைக்க கூடிய வாய்ப்­பி­னையும், தமிழ் பேசும் மக்கள் தங்கள் மொழி­க­ளி­லேயே தகவல் பெற்­றுக்­கொள்ளக் கூடிய சந்­தர்ப்­பத்­தையும், பொது பணி­யிலுள்ள அனை­வ­ருக்கும் தக­வ­ல­றியும் உரிமைச் சட்டம் குறித்த போத­னை­யையும் பெற்­றுக்­கொ­டுப்­பதன் மூலம் மேலும் இச்­சட்­டத்தை வலுப்­ப­டுத்­திட முடியும். இதனை உரிய அமைச்­சரும் ஆணைக்­கு­ழுவும் பாரா­ளு­மன்­றமும் கவ­னத்தில் கொள்­ளுதல் வேண்டும். எனவே உங்கள் தொடர்­பான தீர்­மா­னங்கள் குறித்து அறிந்து கொள்­ளக்­கூ­டிய அனைத்து உரி­மையும் பாரா­ளு­மன்றம் எமக்கு வழங்­கி­யுள்­ளது. அதனை பறித்­திட யாராலும் இய­லாது. ஆகவே அரச அதி­கா­ரி­களும், மக்கள் பிர­தி­நி­தி­களும் பூரண அறிவை பெற்றுக்கொள்ள முயல வேண்டும். அவற்றுடன் அசமந்த போக்கான செயற்பாடுகளை விடுத்து செய்வதை திருந்த செய்திட முயலவேண்டும்.   - இரோஷா வடிவேல் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரி 

2024-06-24 12:18:32
news-image

காயமடைந்த புலிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய...

2024-06-23 18:27:21
news-image

தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

2024-06-23 12:56:32
news-image

நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் பாய்ச்சல்

2024-06-23 10:42:42
news-image

ஜீவனுக்கு எதிரான முதலாளிமார் சம்மேளனத்தின் போர்க்கொடி 

2024-06-23 10:36:16
news-image

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல்...

2024-06-23 09:54:12
news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42