ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் நாட்டை நிர்­வ­கிக்கும் திறன் இல்லை. அதனால் தற்­போது நாட்டில் பொரு­ளா­தார பயங்­க­ர­வாதம் மேலெ­ழுந்­துள்­ளது. அப்­பொ­ரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை தாங்­கு­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன்  என்று  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அத்­துடன் ஒவ்­வொரு மே தினக் கூட்­டங்­க­ளிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்­கி­றது. ஆகவே இம்­முறை மே தினம் மூலம் கிடைக்கும் பலத்­தைக்­கொண்டு நல்­லாட்சி அர­சாங்­கத்தை மேலும் வலு­வி­ழக்கச் செய்து வீட்­டுக்­க­னுப்­புவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். கூட்டு எதிர்க்­கட்­சியின் தொழி­லாளர் தினக்­கூட்டம் நேற்று காலி சம­னல மைதா­னத்தில் நடை­பெற்­றது.

அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த மே தினத்தில் காலி­மு­கத்­தி­டலில் சனக்­கூட்டம் நிறைந்து வழிந்­தது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை முழுந்­தா­ளிடச் செய்த மே தின­மாக அது அமைந்­தது. எனவே இன்றை மே தினக் கூட்­டத்­துடன் அர­சாங்­கத்தின் தவளும் நிலையை அடையும். கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி , ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி என மூன்று தரப்­பையும் ஒன்­றாக தோற்­க­டிக்க முடிந்­தது. அதுதான் மக்­களின் தீர்ப்­பாகும். மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் எஞ்­சி­யுள்­ள­வர்­க­ளை­யா­வது பாது­காக்க வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்­கு­ரிய அறி­வித்லை விடுக்க வேண்டும். அல்­லாது போனால் அவர்­ளையும் பாது­காக்க முடி­யா­து­போகும்.அர­சாங்­கத்­திற்கு தீர்­மானம்  எடுப்­ப­தற்குப் பயம்.

எனி­னும எம்மை சிறைக்கு அனுப்­பு­வ­தாயின் அச்­ச­மின்றி தீர்­மானம் எடுக்­கின்­றனர். வெசக் தினம், மே தினம் என்­ப­வற்றை மாற்­று­வ­தற்கும் அச்சம் கொள்­வ­தில்லை.விஞ்­ஞானத் தன்­மை­யுடன் அமைச்­ச­ரவை அமைப்­ப­தா­கக்­கூ­றிக்­கொண்டு அமைச்­ச­ர­வையை  நிய­மித்­தனர். அவர்­களின் விஞ்­ஞானத் தன­மை­யினை கண்­டு­கோள்ள முடிந்­தது. லொத்தர் சபையை வெளி­வி­வ­கார அமைச்சின் கீழ் கொண்­டு­வந்­தனர். மத்­திய வங்­கியை பிர­த­மரின் கீழ் கொண்­டு­வந்­தனர். அத­னா­லேயே மத்­திய வங்­கியில் மோசடி இடம்­பெற்­றது. ஜனா­தி­ப­தியின் அலு­வ­லர்கள் இலஞ்சம் பெற்­ற­தாக சிக்­கி­யுள்­ளனர். எனது செய­லா­ளக்கு எதி­ரா­கவும் குற்­ற­சாட்டு முன்­வைத்­தனர்.

எனினும் அவரை அர­சியல் ரீதி­யா­கவே குற்றம் சாட்­டி­யுள்­ளனர். நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் வழி­ய­மைக்­கப்­பட்ட பொரு­ளாதா கொள்கைத் திட்ம் இல்லை. மத்­தள விமான நிலை­யத்தில் நெல்லை களஞ்­சி­யப்­ப­டுத்­தினர். அந்­த­ள­விற்கு எமது ஆட்­சியில் நெல் உற்­பத்­தியில் தன்­னி­றைவு இருந்­தது. ஆனால் தற்­போ­தைய நிலையை குறிப்­பிடத் தேவை­யில்லை. மேலும் தற்­போது விவ­சா­யி­களை  மாத்­தி­ர­மல்­லாது அவர்கள் பிள்­ளை­க­ளையும் பழி வாங்­கு­கின்­றனர்.அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நாம் அமைத்தோம். அதனைப் பார்க்­கும்­போது எமக்கு சந்­தோஷம் ஏற்­ப­டு­கி­றது.

எனினும் அத­னையும் விட அதனை விற்­பனை செய்­யும்­போது பிர­த­மரின் முகத்தில் சந்­தோஷம் தென்­பட்­டது. மேலும் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­கின்­றனர். ரூபாவின் பெறு­மானம் நாளுக்கு நாள் குறை­கி­றது. அதனால் பொருட்­களின் விலை அதி­க­ரிக்­கி­றது. அது குறித்து அர­சாங்கம் அக்­க­றை­யற்­றி­ருக்­கி­றது.  ரூபாவின் விலையை இரு­நூறு ரூபா வரையில் அதி­க­ரிக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு சர்­வ­தேச நாணய நிதியம் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது. சகல துறை­க­ளிலும் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. பெட்டிக் கடை­யொன்­றுக்கும் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. விகா­ரைகள் மீதும் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. தம்­புள்ளை விகா­ரையின் உண்­டி­யல்­க­ளுக்கும் சீல் வைக்­கப்­பட்­டது.பத்து இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை  வழங்­கு­வதாக் குறிப்­பிட்­டனர். எங்கே அவை வழங்­கப்­பட்­டதா?குரு­நாகல் வொக்ஸ் வோகன்  நிறு­வனம் எங்கே. இவ்­வா­றாக இந்த அர­சாங்கம் வாய­ளவில் மாத்­தி­ரம வீரம் பேசும் பொய் அர­சாங்­க­மாக உள்­ளது.

ஆகவே இந்த அர­சாங்கம் தொடர்ந்து சென்றால் மே தினத்தில் தொழி­லா­ளர்கள் பேரணி செல்­லப்­போ­வ­தில்லை. தொழி­லற்­ற­வர்­களே பேரணி செல்ல வேண்டி வரும்.மத்­திய வங்­கியில் கைவைத்­தனர். ஆனால் தற்­போது சமுர்த்தி வங்­கி­க­ளிலும் கைவைப்­ப­தற்கு ஆயத்­த­மா­கின்­றனர். நாட்டில் எப்­போ­து­மில்­லா­த­வாறு பாதாள உலகக் குழுக்­களின்  செற­யற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. சட்­டத்தை வலைத்து பாதாள உலகக் குழுக்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. நாட்டில் பிரச்­சினை இட­ம­பெ­றும்­போது பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பித்தே கட்­டுப்­ப­டுத்­து­கின்­றனர்.

எனவே நாட்டை நிர்­வ­கிக்கும் திறன் இந்த இரு தலை­வர்­க­ளி­டமும் இல்லை. மேலும்  இல­வசக் கல்வி, சுகா­தாரம்,சமுர்தி என்­ப­வற்றை இல்­லாது செய்­வது தொடர்பில் யோசிக்­கின்­றனர். அவற்றை எவ்­வாறு இல்­லாது செய்­வது தொடர்பில் வெளி­நாட்டு நிறு­வனம் ஒன்­றிடம் திட்ட வரைபு கோரி­யுள்­ளனர்.நாட்டில் பெளத்த விகாரை கட்­டு­வ­தாக இருந்­தாலும் அனு­மதி கோர வேண்­டி­யுள்­ளது. எமக்கு மாத்­திரம் இல்லை வேறு மதத்­த­வர்­க­ளுக்கும் இது பொருந்தும். ஆகவே ஏனைய சம­யத்­த­வர்­களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன்  வடக்கில் விகாரை அமைப்பதற்கு இடமளிக்க முடுயாது எனக்குறிப்பிட்டுள்ளனர்.பிரதமரை ஜனாதிபதியே பாதுாக்கிறார்.

மேலும் பொய் வழக்குகளை தாக்கல் செய்து எதிராளிகளை தண்டிப்பதற்கும் எதரிபார்க்கின்றனர்.  தற்போது நாட்டில் பொருளாதாரப் பயங்கரவதம் தலைதூக்கியுள்ளது. ஆகவே அதற்கு எதிரான போட்டத்திற்கு தலமைதாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். எனவே அந்த போராட்டத்தில் வெற்றிகொண்டு நாம் அமைக்கும் அரசாங்கத்தில் மக்கள் மீது  விதிக்கப்பட்டுள்ள அனாவசிய வரிகளை நீக்குவோம் எனவும் அவர் மேலும் தெரவித்தார்.