(எம். நியூட்டன்)

மே 18 நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடாத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் அழைப்பு பொது அமைப்புக்களின் பிரநிதிகள் இருவரை கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவிடம் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். 

மே 18 முள்ளவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு தொடர்பான கூட்டம் நேற்று வடமாகாண முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. 

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் அமைச்சர்களான சர்வேஸ்வரன், சிவனேசன், திருமதி அனந்தி சசிதரன் முன்னாள் அமைச்சர்களான குருகுலராஜா, ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

 கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்றது போன்று இந்த வருடமும் வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று இன்று பிரசின்னமாகியிருந்த மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் இடமானாது பிரதேச சபைக்குரிய காணியாகும். எனவே அது என்னுடைய உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வருகின்றது. சம்பந்தப்பட்ட நிகழ்வினை ஒழுங்கமைக்க ஒரு உறுபினர்கள் குழு நியமிக்கப்பட்டதுள்ளது. எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரும் நினைவாதலால் எம்முடன் ஒன்றுசேர்ந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்ய பல பொது அமைப்புக்கள் எம்முடன் இணைந்துள்ளன. அவ்வாறான கரிணைச உடைய அக்கறை உடைய பொது அமைப்புக்கள் எமது குழுவுடன் எதிர்வரும் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கலந்துகொள்ளுமாறும் இங்கு ஒன்றுபட்டு நிகழ்வுகளை எவ்வாறு செய்வது என்பது ஆராயபப்படும். இக் கூட்டத்தில் இதில் பங்குபற்ற விரும்புகிகன்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அந்த அமைப்புக்களின் சார்பாக அழைப்பு விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒன்றுபட்டு நிகழ்வை நடத்துவதற்கு விரும்புபவர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுகிறேன். 

இக் கலந்துரையாடல் முடிவதற்கு முன்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 5 பேர் எம்முடன் கலந்துரையாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களும் தமது விருப்பங்கள் எண்ணங்களை தெளிவுபடுத்த கேட்டிருந்தோம். அவர்களும் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சற்று வித்தியாசமான எண்ணத்தை கொண்டிருந்தார்கள். வடமாகாண சபை இவ்வளவு காலமும் செய்து வந்ததை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அவ்வாறு வடமாகாண சபை செய்தும் கூட கடந்த வருடம் நான்கு இடங்களில் இவ்வாறான நிகழ்வேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றமையினால் நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவது பயனுள்ளது என்றார்கள். நாங்களும் இதனை வரவேற்கின்றோம். அதே எண்ணத்தைத் தான் நாங்கள் கொண்டுள்ளோம். 

அவர்களுடைய கருத்து உங்களால் அனைவரையும் ஒன்றிணைத்து செய்ய முடியாது போனமையினால் எங்களிடம் விடுங்கள் நாங்கள் அனைவரையும் கொண்டுவருகின்றோம். இதன்போது நான் கூறினேன் நாங்கள் ஜனநாயக ரீதியில் மக்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து முடிவிற்கு வருவோம். நீங்கள் எல்லோரையும் கொண்டு வருவதாயின் உங்களிடம் வேறு விதங்கள் இருப்பதற்கு எமக்கு தெரியும். அந்ததந்த விதங்களில் மக்களைச் சேர்த்து ஒருவரை வரவேண்டாம் என்றும் வந்தவரை இதற்குள் வரவேண்டாம் என்றும் கூறி செய்வது எங்களுக்கு சரியானதாகப் படவில்லை. உங்களுக்கு எங்களுடன் சேர்ந்திருக்க விருப்பம் என்றால் எங்களுக்கு பல நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது. 

குறிப்பாக நினைவேந்தல் இடம் அழகு படுத்தப்படல் வேண்டும். தீச்சுடர் ஏற்பாடுகள் இதில் பிரதான சுடர், பொதுமக்கள் சுடர் ஏற்பாடுகள் பொலிஸாரின் அனுமதி பெறல், ஊடக ஏற்பாடுகள் ஒலிபெருக்கி ஏற்பாடுகள் தாகசாந்தி ஏற்பாடுகள் மாவட்ட ரீதியான பிரயான ஏற்பாடுகள் என பல ஏற்பாடுகள் செய்ய  வேண்டும். இதில் ஏதாவது ஒன்று செய்வதாயின் எம்முடன் இணைந்து செய்வதற்கு ஒத்துழைக்க முடியும். இத்தகைய விடயங்கள் பிடிப்பில்லாதது போல் தெரிகிறது. மேலும் நினைவேந்தல் நிகழ்வு கூட்டம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று எண்ணங்கள் அவர்களிடம் இருந்தன. அத்தகைய எண்ணங்களை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள எமது செயற்குழுவுடன் கலந்துரையாட முடியும் என கூறியுள்ளோம் என்றார்.