சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்கத்துடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

குறித்த பெண்களின் பயண பைகளிலிருந்து ஒரு கிலோ கிராமிற்கும் அதிகளவான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,  

இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.