(நஜிமுதீன் )

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க இன்று கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டார்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க இன்று திங்கட்கிழமை காலியில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் கூட்டு எதிரணியுடனும் இணைந்து கொண்டார். 

அத்துடன் அவரது ஆதரவார்கள் 500 பேரும் கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.