சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துகளில் மின்னல் வேகத்தில் டோனி ஸ்டம்பிங் செய்து துடுப்பாட்டக்காரர்களை ஆட்டமிழக்க வைக்கின்றார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருமான மைக்கல் ஹஸி தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த சென்னை, பெங்களூர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளால் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

ரோயல் செலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான டிவில்லியர்ஸ், முருகன் ஆகிய இருவரையும் டோனி ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தமை அபரமானது. 

உலக கிரிக்கெட் அரங்கில் டோனி தான் பெயில்ஸை அதிவேகமாக தகர்க்கின்றார். அத்துடன் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை குவிப்பிலும் அவரின் பங்கு அளப்பரியது என்றார்.

அத்துடன் டோனி கொல்கத்தா அணியின் வீரர் உத்தப்பாவை ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க வைத்ததன் மூலம்  ஐ.பி.எல். போட்டிகளில்  32 ஸ்டம்ப்களை மேற்கொண்டு அதிகளவான ஸ்டம்பிங்களை மேற்கொண்ட விக்கெட்காப்பாளர் என தடம்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.