ஜெயலலிதா நினைவிடம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

Published By: Priyatharshan

07 May, 2018 | 11:36 AM
image

ஜெயலலிதா நினைவிடம் ஓராண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் எம். ஜி. ஆர். நினைவிட வளாகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கான நினைவிடம் எழுப்புவதற்காக இன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிவித்தது. அத்துடன் இந்த மண்டபம் கட்டுவதற்காக சுமார் 50.80 கோடி ரூபா அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மெரீனாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா தொடங்கியது. 

இதற்கான யாகசாலை பூஜைகள் காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  பங்குபற்றினர். இவர்களுடன் அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘ஜெயலலிதா நினைவிடம் ஓராண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும்.’ என்றார்.

இதனிடையே இது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்  சிலர், ஜெயலலிதாவின் நினைவிடம் அவரின் இரண்டாவது நினைவு தினமான இந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதியன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அவரின் பிறந்த நாளான பெப்ரவரி 24 ஆம் திகதியன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47