இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 20 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் அதன் மொழியை கற்பதற்கு  விட்டமின் "டி" பெரிய அளவில் உதவி புரிவதாக அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

விட்டமின் "டி" யை சூரிய ஒளி விட்டமின் என்று சொல்வதையும் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக விட்டமின் "டி" இருக்கிறது. அதனால் ஒவ்வொரு குழந்தைகளையும் சூரிய ஒளியில் சிறிது நேரம் படும் படி வைத்திருக்கவேண்டும்.

அண்மைய ஆய்வின் படி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி தியாலம் வரையிலான நேரத்தில் சூரிய ஒளியை எம்மீதும், குழந்தைகளின் மீதும் படும்படி பார்த்துக் கொண்டால், சூரிய ஒளியிலிருந்து விட்டமின் "டி" சத்தினை எம்முடைய உடல் கிரகித்துக் கொள்ளும். தேவைக்கும் குறைவான விட்டமின் "டி" சத்தினைப் பெற்றிருப்பவர்களுக்கு நாளடைவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதே போல் தற்போது வாரத்திற்கு இரண்டு முறை, 5 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை ஒவ்வொரு மனிதனும் தங்களின் முகம், தோள்பட்டை, கால்கள், முதுகு ஆகிய பகுதிகளில் சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படி செய்வதன் மூலம் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் விட்டமின் "டி" யை தோல் பகுதிகள் கிரகித்துக் கொள்ளும். இந்த தருணத்தில் தோலில் புற்றுநோய் தாக்கியிருந்தால் அவை கூட குணமாகிவிடுமாம்.

விட்டமின் "டி" சத்து போதிய அளவிற்கு பெறாதவர்களின் எலும்புகள் எளிதாக உடையக்கூடியதாகவும், வலுவற்றதாகவும், ஒழுங்கற்ற வடிவமைப்புடனும் இருக்கும். இதனால் இவர்களின் இதயம், மூளை மற்றும் நேயெதிர்ப்பு சக்தி ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படும். அதனால் இவர்கள் சூரிய உதயம் மற்றும் சூரியனின் அஸ்தமனத்திற்கு முன்னர் 40 நிமிடங்கள் வரை எம்முடைய உடலில் 40% பகுதியில் சூரிய ஒளி படரவேண்டும். இப்படி செய்தால் எலும்புகள் வலுவடையும். உடலுக்கும் போதிய அளவு விட்டமின் "டி" சத்து கிடைக்கும்.

வைத்தியர் அகர்வால்,

தொகுப்பு அனுஷா.