தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதியன்று நடைபெறும் என்று அ.தி.மு.க அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ .பன்னீர் செல்வமும். இணை ஒருங்கிணைப்பாளரும். முதல்வருமான எடப்பாடி. கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது....

"மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரீனாவில் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்  வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று நடைபெறுகிறது. காலை 8 30 மணியளவில் அ.தி.மு.க சார்பில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது.

இதில் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும்." என்று அந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.