தங்காலை-வீரகெட்டிய பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஓடியதன் காரணமாக இடையில் சென்ற  மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட குறித்த  விபத்தில் 17 வயதான  இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.