பூமி­யி­லி­ருந்து 45 ஒளி­யாண்­டுகள் தொலை­வி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை வலம் வரும் நச்சுத் தன்­மை­யுள்ள ஐத­ர­சனைக் கொண்ட சூப்பர் பூமி­யொன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

55 கான்­கிறை ஈ என்ற மேற்­படி கோளா­னது நாசா­வி­னதும் ஐரோப்­பிய விண்­வெளி முகவர் நிலை­யத்­தி­னதும் ஹபிள் விண்­வெளி தொலை­நோக்­கியால் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கோளின் வளி­ ம­ண­்ட­லத்தில் ஐத­ர­சனும் ஹீலி­யமும் காணப்­ப­டு­கின்ற போதும் நீர் இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் இந்தக் கோள் பூமியை விட வும் இரு மடங்கு அள­வு­டை­யது என்­ப­து டன் பூமி­யுடன் ஒப்­பி­டு­கையில் 8 மடங்கு திணிவைக் கொண்­ட­தாகும்.

18 மணித்­தி­யால வரு­டத்தைக் கொண்ட மேற்­படி கோளில் 2,000 பாகை செல்சி யஸுக்கு அதிகமான வெப்பநிலை நிலவு கின்றமை குறிப்பிடத்தக்கது.