லெபனான் நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு சென்ற இலங்­கை­யர்கள் 53 பேர் தங்கள் சேவைக்­காலம் முடி­வ­டைந்து தொடர்ந்தும் அந்­நாட்டில் தங்­கி­யி­ருந்த நிலையில் பொதுமன்­னிப்பின் அடிப்­ப­டையில் நேற்று நாட்­டுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

லெபனான் நாட்­டுக்கு பணிப்பெண் தொழி­லுக்கு சென்று தொழில் ஒப்­பந்த காலம் நிறை­வ­டைந்த பின்­னரும் அங்கு தொழில் புரிந்து வந்த இலங்­கை­யர்கள் 53 பேர் பொதுமன்­னிப்பின் அடிப்­ப­டையில் நேற்று நாடு திரும்­பி­யுள்­ளனர்.

இவ்­வாறு நாடு திரும்­பிய அனை­வரும் பெண்­க­ளாவர். லெபனான் தூத­ர­கத்தின் உத­வி­யுடன் நேற்றுக் காலை  9.50 மணிக்கு யூ.கே. –363 என்ற விமா­னத்தில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை இவர்கள் வந்­த­டைந்­துள்ளனர்.