தடை செய்யப்பட்ட எச்.டீ.பீ,ஈ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உணவு பொதியிடும் பெட்டிகளை  உற்பத்தி செய்து வந்த   நிறுவனம் ஒன்று சுற்றுச் சூழல் அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தியை தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தரமற்ற பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் தடை செய்யப்பட்ட எச்.டீ.பீ,ஈ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, உணவு பொதியிடும் பெட்டிகளை  உற்பத்தி செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உற்பத்திகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மத்திய சுற்றுச் சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.