ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவராகயிருந்தாலும் அவர்களது தகுதி அந்தஸ்த்தை பாராமல் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இலஞ்ச ஊழலை சகித்துக்கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் தொடர்ந்தும் தண்டிக்கும் எனவும் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரியும் தேசிய மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.