இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

20 மில்லியன்  ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். 

இதே வேளை  இச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர். 

மேலும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.