ஜனாதிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளர். 

ஊழல் மோசடிக்க்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.