கட்சித் தலைவர்களினால் எதிர்வரும் 8ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள அரச கொள்கை பிரகடனம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் நேற்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நடைபெற்ற போதே குறித்த தீர்மானம் கட்சித் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக ஊடக செயலாளர் சமிந்த கமகே தெரிவித்தார். 

இது தொடர்பில் சமிந்த கமகே மேலும் தெரிவித்ததாவது, 

"புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய பாராளுமன்றின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், புதிதாக நியமனம் பெற்ற அமைச்சரவை தொடர்பிலும் சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில்  கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 

இக்கூட்டத்தொடரின் போது கட்சித் தலைவர்களினால் எதிர்வரும் 8ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள அரச கொள்கை பிரகடனம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது."
என தெரிவித்தார் .