இயக்குநர் சுதா.  தற்போது சூர்யாவை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். 

இவரின் இயக்கத்தில் துரோகி மற்றும் இறுதிச்சுற்று ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சூர்யா தற்போது நடித்து வரும் என். ஜி.கே படம் முடிவடைந்து, அடுத்ததாக கே. வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு பிறகு தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன.

பீரியட் ஃபிலிமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் அவர் இசையமைப்பாளரா? அல்லது நடிகரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

இதன் காரணமாக சூர்யாவும் ஹரியும் இணையும் படத்தின் பணிகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதிச்சுற்று மூலம் ரசிகர்களை கவர்ந்த சுதா, சூர்யாவை வேறு கோணங்களில் காட்டி வெற்றிப் பெறுவார் என்கிறார்கள் திரையுலகினர்.