வெசாக் தினத்தினை முன்னிட்டு மதுபான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மறைத்து வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

களுவாஞ்க்சிகுடி பொதுச்சந்தையில் மரக்கறிக்கடையொன்றில் மரக்குற்றிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட குறித்த நபரை கைது செய்ததுடன் 45 போத்தல் மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலையே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.