மாலபே பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓர்கிட் அபார்ட்மென்ட் - 2 இன் நிர்மாண நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன.

22 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொடர்மனை அமைந்துள்ளதுடன் 100க்கும் அதிகமான சாவிகள் அண்மையில் குறித்த உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது இல்லங்களில் குடியேறியுள்ளனர்.

நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த தொடர்மனை, வைத்தியர்கள் மற்றும் சுகாதார துறைசார்ந்த நிபுணர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது. 

பல வைத்தியசாலைகள் இந்த தொடர்மனைக்கு அருகில் அமைந்துள்ளன. வைத்தியர் நெவில் பெர்னான்டோ போதனா வைத்தியசாலை, மிலேனியம் ஐ.ரி. ஹொரிசன் கம்பஸ், SAITM, CINEC கம்பஸ், SLIIT போன்ற பல இங்கு காணப்படுகின்றன.

மாலபே பகுதி பெருமளவு பசுமையான சுற்றுப்புறச்சூழலை கொண்ட இனிமையான நகரமாக அமைந்துள்ளது. இயற்கையான தூய காற்று, குறைந்த இரைச்சல் மற்றும் ஓய்வுக்கு உகந்த நகராக காணப்படுகிறது. நகரம் பல வணிக மற்றும் வதிவிட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதுடன் வெளிச்சுற்று நெடுஞ்சாலைக்கு இலகுவாக செல்லக்கூடிய வசதியை கொண்டுள்ளது. இதற்கமைய, சொத்தின் பெறுமதியும் பெருமளவு அதிகரித்துள்ளது.

12 மாடிகளை கொண்ட இந்த தொடர்மனையை நிவாஸி டிவலபர்ஸ் நிர்மாணித்துள்ளதுடன், அதன் தாய் நிறுவனமான புகழ்பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தக்காரரான இன்டர்நஷனல் கொன்ஸ்டரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC)உடன் இணைந்து நிர்மாணித்துள்ளது. இதில் 160 அலகுகள் காணப்படுவதுடன் இதில் சொற்பளவு குடியிருப்புகள் மாத்திரமே எஞ்சியுள்ளதுடன் 2018 இரண்டாம் காலாண்டில் இந்த எஞ்சியிருக்கும் குடியிருப்புகளும் விற்றுத்தீர்ந்துவிடும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

நிவாஸி டிவலபர்ஸ் மாலபே பிரைவட் லிமிட்டெட்டின் உரிமையாண்மையின் கீழ் காணப்படும் இந்த திட்டம், 22 ஏக்கர் பரப்பில் மாலபே நகரில் அமைந்துள்ளது.

பெருமளவு இல்லங்களை கொண்டுள்ளதுடன் நவீன வசதிகள் பலதையும் தன்வசம் கொண்டுள்ளது. 170 இல்லங்களும், இரு தொடர்மனை தொகுதிகளில் 94 மற்றும் 160 அலகுகளும் காணப்படுகின்றன. 

இதில் மூன்று பாரிய நீச்சல் தடாகங்களும், இரு நடை பகுதிகளும், இரு பாரிய குளங்களும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடலும் காணப்படுகின்றன. தொடர்மனையை சூழல் பச்சைப்பசேலென தோன்றும் நெற் பயிர்செய்கை நிலங்களும் காணப்படுகின்றன.

உயரமான தொடர்மனையினூடாக ஒவ்வொரு இல்லங்களின் உரிமையாளர்களுக்கும் சிறந்த தோற்றம் வழங்கப்படுகின்றது. 

இந்த தொடர்மனைகள் முழுமையான வசதிகள், எரிவாயு, தொலைபேசி மற்றும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகளையும் கொண்டுள்ளன. 

சமையலறை பான்ட்ரி கபேட்கள், புகை மற்றும் வெப்ப உணரிகள், LED மின்குமிழ்கள், வாயு குளிரூட்டிகளை பொருத்திக் கொள்வதற்கான வசதி மற்றும் வாகன தரிப்பிட வசதி போன்றன அடங்கியுள்ளன. 

இவற்றுக்கு மேலாக, மேலும் பல அனுகூலங்களும் அடங்கியுள்ளன. கழிவு நீர் மற்றும் மழைநீர் சுத்திகரிப்பு வசதிகளுடனான அழகிய தோட்ட  அமைப்புகளும்  அடங்கியுள்ளன.

நிவாஸி மற்றும் ICC ஆகியன இணைந்து பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளன. இதனூடாக நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி துறையில் மைல்கற்களை பதிவு செய்துள்ளன. 35 வருடங்களுக்கு மேலான உயர் மற்றும் பரந்த அனுபவத்துடன் நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக ICC திகழ்கிறது. உயர் தரத்தை பேணுவதுடன் உரிய காலத்தில் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகிறது.