(க.கிஷாந்தன்)

கொழும்பிலிருந்து டயகம பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 28 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர்  இன்று மாலை  6.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து டயகமவிற்குச் சென்ற குறித்த பஸ் ஹட்டன் பகுதியில் நிறுத்த முற்பட்ட போது பஸ்ஸில் பயணித்த நபர் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னர பாய்ந்துள்ளார்.

 இதனையடுத்து பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டு சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.

 உயிரிழந்தவர் தொடர்பான அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.